கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த நாகம்பட்டி அருகே காஞ்சனா (48) விவசாயி என்பவர் தனது நிலத்தில் 35 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். பால் சப்போட்டா, பி.கே.எம் சப்போட்டா, பால்கிரிக்கேட் சப்போட்டா, பச்சைகிரிக்கேட் சப்போட்டா போன்ற 4 வகையான மரங்களை வளர்த்து வருகிறார். தற்போது சீசன் துவங்கியுள்ளதால் மரங்களில் செழித்து குலுங்கி சப்போட்டா பழங்கள் கொத்து கொத்தாக கொய்ந்து தொங்கி காட்சியளித்து. இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு செய்ய உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.