மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் போகக்கூடிய வழியில் தான் விளாச்சேரி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக 200க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. இவர்களின் பொருளாதாரமே இந்த களிமண் பொம்மைகளை நம்பித்தான் உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விதவிதமான கிருஷ்ண பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக கைவினை கலைஞரான ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.