கடத்தப்பட்ட குழந்தை 4 மணிநேரத்தில் மீட்பு

84பார்த்தது
கடத்தப்பட்ட குழந்தை 4 மணிநேரத்தில் மீட்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொல்கத்தா தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை 4 மணிநேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், செல்வம் ஆகியோரை அதிரடியாக கைது செய்துள்ளனர். எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசியபோது 2 பேரும் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி