தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க 86 ஏக்கர் நிலம் கொடுத்தது திமுக. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது அதிமுக. திமுக, காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது, அதை தடுத்து நிறுத்த போராடியது அதிமுக. மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவம் போன்ற இன்னும் பல துப்பாக்கி சூடு சம்பவங்கள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளது. என நாடாளுமன்ற தேர்தலையொட்டி தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.