தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை இன்று (ஆகஸ்ட் 14) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். குஷ்புவின் ராஜினாமாவை ஏற்றதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2023 பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்ற குஷ்பு, ஒன்றரை ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.