ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்திய கேரள அரசு

60பார்த்தது
ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்திய கேரள அரசு
கேரள மாநில அரசு ஓடிடி தளம் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கிறது. ஒரு மாநில அரசு ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் , நல்ல திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓடிடி தளத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிமுகப்படுத்தினார். இந்த ஓடிடி தளத்தில் முதல் கட்டமாக 35 திரைப்படங்களையும், ஆறு ஆவணப்படங்கள் மற்றும் 1 குறும்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒரு படத்தை ஒரு முறை பார்வையிட 75 ரூபாய் வசூலிக்கப்படும். இந்தப் படங்களுக்கு என கிடைக்கும் வருமானத்தின் ஒரு சதவீதம் படத்தின் தயாரிப்பாளருக்கு கொடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி