முத்தக்காட்சியில் நடிக்க சம்மதம் சொன்ன கீர்த்தி சுரேஷ்?

13816பார்த்தது
முத்தக்காட்சியில் நடிக்க சம்மதம் சொன்ன கீர்த்தி சுரேஷ்?
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி படமொன்றில் முத்தக் காட்சியில் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் பரவி உள்ளது. தமிழ் பட நடிகைகள் பலர் இந்தி படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். கீர்த்தி சுரேசுக்கும் 'பேபி ஜான்' என்ற இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதில் வருண் தவான் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில்தான் கீர்த்தி சுரேஷ் முத்தக் காட்சியில் நடிக்க இருக்கிறாராம். முத்தக் காட்சியில் நடிக்க சம்மதித்தபிறகே அவரை ஒப்பந்தம் செய்தார்களாம். இந்தி பட வாய்ப்புகளை பிடிக்கவே முத்தக் காட்சிக்கு அவர் இறங்கி வந்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி