கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் வாரிக்கரையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மேல் நங்கவரத்தைச் சேர்ந்த குமரவேல் (29), குறிச்சியை சேர்ந்த ரத்தினவேல் (33), நங்கவரத்தைச் சேர்ந்த சுரேஷ் (36) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ. 450 பறிமுதல் செய்துள்ளனர்.