கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (செப் 16) காவல்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் திமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.