கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23. 08. 2023) முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர். இ. ஆ. ப தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 62 எண்ணிக்கையிலான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடமிருந்து 13 எண்ணிக்கையிலான மனுக்கள் பெறப்பட்டது.
தொடர்ந்து 2020-ஆண்டுக்கான கொடிநாள் நிதி வசூல் புரிந்தமைக்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல் இயக்குநர் திரு. S. V. R. கிருஷ்ணன் அவர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றும், இரண்டாவதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் திரு. முனைவர். ஜெயபால் அவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றும், தரகம்பட்டி பதிவுத்துறை சார் பதிவாளர் திரு. குமார் அவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றும், மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
உதவித்தொகைகளையும் பதக்கங்களைப் பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி கூறினர்.