ரூ. 18. 42 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி

58பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் ஊராட்சி சின்ன கவுண்டம்பட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 18. 42 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், திமுக தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தோகைமலை ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், நெய்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா வேலாயுதம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி