குளித்தலை லயன்ஸ் சங்கம் சார்பில் பொங்கல் விழா

60பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை முசிறி மேன்மை கல்வி பயிலகம் மற்றும் குளித்தலை லயன்ஸ் சங்கம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி விழா கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு குளித்தலை மேன்மை கல்வி பயிலகம் தலைவர், முன்னாள் டிஎஸ்பி ராஜன் தலைமை வகித்தார். கிராமியம் இயக்குனர் டாக்டர் நாராயணன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ஜெயமூர்த்தி, கலைமகள் மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் கருணாநிதி, ஓய்வு பெற்ற பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேன்மை கல்வி பயிலக செயலாளர் முனைவர் சிவராஜ் அனைவரையும் வரவேற்றார்.

 விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கேபிஎஸ் நிறுவன இயக்குனர் தொழிலதிபர் மீனா வினோத் குமார் குளித்தலையில் அரசு தேர்வு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு குரூப் 4ல் தேர்வாகி உள்ள மாணவி சாருலதா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 

விழாவில் தமிழ் பேரவை தலைவர் கடவூர் மணிமாறன், முன்னாள் வேளாண் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயராமன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர்கள் தங்கராஜ், தர்மராஜ், மாயவன் ஞானவேல், முசிறி நீலகண்டன், லயன்ஸ் சங்க செயலாளர் தனபால் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் கருப்பண்ணன் விழா ஒருங்கிணைப்பு செய்திருந்தார். முடிவில் ஓய்வு பெற்ற டிஎஸ்பியும் லயன்ஸ் சங்க தலைவருமான மாணிக்கம் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி