ஶ்ரீ பகவதி அம்மன் கோவில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

83பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகின்ற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை ஒட்டி யாகசாலையில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு முகூர்த்தக்கால் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பால், தயிர், மஞ்சள் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து முகூர்த்த காலை எடுத்துக் கொண்டு யாகசாலையில் வைத்து நவதானியங்கள், பால் ஊற்றி முகூர்த்த கால் நட்டு வைத்தனர். இதில் பகவதி அம்மன் கோவில் தெரு பக்தர்கள், திருக்கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி