குளித்தலையில் தவெக நிர்வாகிகள் உறுதிமொழி

79பார்த்தது
கரூர் மாவட்டம், கரூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக கிழக்கு மாவட்ட செயலாளராக பாலசுப்பிரமணியை நிறுவனர் விஜய் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து குளித்தலை தொகுதிக்கு முதல் முறையாக குளித்தலை பேருந்து நிலைய பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக வெற்றிக்கழகம் கரூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பாலசுப்பிரமணி, இணைச் செயலாளர் சதாசிவம் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுடன் பேரணியாக வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். 

தொடர்ந்து காந்தி சிலை முன்பாக மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி நியமனம் செய்ததை நன்றி தெரிவித்து உறுதிமொழி எடுத்தார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியை அனைவரும் வாசித்து வருகின்ற தேர்தலில் தமிழக வெற்றிக்காக நிறுவனரை ஆதரிப்போம் என உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி