பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

74பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி கரூர் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் பங்களாபுதூரில் நடைபெற்றது. இதில் குளித்தலை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் செந்தில் குமார் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் தனபால் வரவேற்புரை நிகழ்த்தினார். கொள்கை பரப்பு செயலாளர் ஆனந்த், தோகைமலை ஒன்றிய செயலாளர் அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீர்மானம். 1.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் க்கு ஆதரவாக குளித்தலை சட்டமன்றத் தொகுதி பாமக நிர்வாகிகள் அனைவரும்
இனி தேர்தல் பணி செய்வதில்லை, தேர்தல் பணியில் இருந்து விலகுகிறோம் என்று முடிவு செய்யப்பட்டது

2. தன்னை கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்று வேட்பாளரிடம் பொய் சொல்லி தேர்தல் பிரச்சார செலவு தொகையை பெற்றுக் கொண்டு சென்ற பாமக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், பசுபதி மற்றும் மூன்று நபர்கள் மீது பாமக கட்சி தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி