குளித்தலை: அய்யர்மலை தேர்த் திருவிழா கோலாகலம்

3330பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ள இரத்தினகிரீசுவரர் கோவில் காவிரியின் தென்கரையில் அமையப் பெற்றுள்ள சிவதலங்களில் முதன்மையானது. 1017 படி உயரம் கொண்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அன்று இரவு உற்சவ மூர்த்தி புஷ்ப விமானத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பகலில் பல்லக்கிலும், இரவில் நந்தி, கமல வாகனம், பூத, சிம்ம, கைலாச, சேஷ, வெள்ளி ரிஷப வாகனம், காமதேனு, யானை, ஹம்ச, இந்திர, குதிரை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுரும்பார்குழலி உடனுறை இரத்தினகிரீசுவரர் உற்சவமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வீதி உலா நடைபெற்றுவந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி இன்று சுரும்பார்குழலி உடனுறை இரத்தினகிரீசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதணைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து அலங்கரிங்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 6 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்புடைய செய்தி