பறவைக் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை வழிகாட்டுதல்

38262பார்த்தது
பறவைக் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை வழிகாட்டுதல்
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவ தொடங்கியுள்ள நிலையில்,கேரள - தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவாமல் தடுக்க வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருவோரை கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். பறவைக் காய்ச்சல் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை மருத்துவமனைகள் ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு கவசங்கள், ஓசல்டாமிவிா் மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி