கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பூலாம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (45). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்தபோது வீட்டின் முன்பு சுப்பிரமணி, அருண்குமார் ஆகியோர் நின்று கொண்டு செல்போனில் யாரிடமோ அசிங்கமாக திட்டி கொண்டு இருந்துள்ளனர். இதை கணேசன் வீட்டில் பெண்கள் உள்ளார்கள் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு இருவரும் கணேசனை திட்டி கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கணேசன் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.