கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா கட்டளை பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ராமன் (50). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த மாயனூர் போலீசார் மது விற்ற ராமன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த ஏழு மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.