கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திராமௌலி. சமையல் வேலை செய்துவரும் இவர் கடந்த மாதம் இரண்டாம் தேதி அன்று தனது வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்க்கும்போது கதவு உடைக்கட்டும் பீரோவில் இருந்த சுமார் 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1, 10, 000 பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.