பெண்களுக்கான நிதி மேம்பாடு குறித்த பயிலரங்கம்

77பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி மேம்பாடு குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம். பி ஜோதிமணி, திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட விமான நிலையம் அதானிக்கு தாரை வார்த்து கொடுக்கத்தான் விரிவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. அதே போன்று மத்திய அரசு வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதிகளை தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. தமிழகத்தில் கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருக்கிறது என்றார்.

தொடர்புடைய செய்தி