விவசாயிகளின் கேள்விக்கு பதில்அளிக்க திணறிய மின்வாரிய அதிகாரி

53பார்த்தது
கரூரில் விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய மின்வாரிய தலைமை பொறியாளர்.


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று மின்வாரிய தலைமை பொறியாளரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து, அதன் அடிப்படையில் மனுக்களை அளித்தனர்.

இதன் ஒரு பகுதியாக கரூர் மின்வாரிய தலைமை பொறியாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராஜா தலைமையிலான விவசாயிகள் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் தட்கல் திட்டத்திலும், அனைத்து வகையான வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் 2- ஆண்டுகளாக சுமார் 30, 000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் காக்க வைக்கப்பட்டுள்ளதால், உடனடியாக மின்சாரம் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

அப்போது, விவசாயிகள் மின்மிகு மாநிலமான தமிழ்நாட்டில், வீடுகளுக்கு 15-நாட்களிலும், வணிகம் தொழிற்சாலைகளுக்கு 30 நாட்களிலும் மின் இணைப்பு கொடுக்கும் மின்வாரியம், சாதாரண திட்டத்தில் பணம் செலுத்திய விவசாயிகளை 15 ஆண்டுகள் காக்க வைப்பது ஏன் எனவும்,

2, 50, 000- முதல் 3, 00, 000- வரை பணம் செலுத்தி, 90 நாட்களில் இணைப்பு பெறலாம் என கூறி, 3- வருடங்களுக்கு மேலாகியும் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. எப்போது வழங்குவீர்கள்? என்ற கேள்விக்கு, தலைமை பொறியாளர் பதிலளிக்க முடியாமல் திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி