காமராஜ் மார்க்கெட் அருகே சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ஜூலை 27 ஆம் தேதி காலை 9 மணி அளவில், காமராஜ் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது காமராஜ் மார்க்கெட் பகுதியில் கிருஷ்ணன் டீக்கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விற்பனையில் ஈடுபட்ட, கரூர் அடுத்த வெங்கமேடு, வாட்டர் டேங்க், இந்திரா நகரை சேர்ந்த
குட்டிபிள்ளை மகன் சேகர் வயது 38 என்பவர் இந்த சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 குவாட்டர் மது பாட்டில்களையும், விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.