ஏப்-19ல் அளிக்கும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு- உதயநிதி.

61பார்த்தது
ஏப்ரல் 19 இல் அளிக்கும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு- உதயநிதி ஸ்டாலின் கரூரில் விளக்கம்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமணிக்கு பொதுமக்களிடைய ஆதரவு திரட்டுவதற்காக, தமிழக இளைஞர் நலன் & விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இன்று திறந்தவேனில் கரூர் ரவுண்டான பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று, முதல் வாக்கு பெட்டியில் நான்காவது இடத்தில் கை சின்னம் இருக்கும். அதன் அருகிலேயே சின்னதா ஒரு பட்டன் இருக்கும்.

அது பச்சை கலர் பட்டனா, நீல கலர் பட்டனா எனக்கு தெரியல. அந்த பட்டனை பார்த்து நீங்க போடுறீங்க ஓட்டு. அதுதான் மோடிக்கு வைக்கிற வேட்டு. வச்சிருவீங்களா! செஞ்சிருவீங்களா! என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் பொதுமக்களிடம் பேசினார்.

அப்போது அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி