கார்வழி- காதல் வயப்பட்ட பள்ளி மாணவி மாயம். தந்தை புகார்.

52பார்த்தது
கார்வழி அருகே காதல் வயப்பட்ட பள்ளி மாணவி மாயம். மகளைக் காணவில்லை தந்தை புகார்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, கார்வழி அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி வயது 47.

இவரது மகள் 14 வயது சிறுமி. இவர் கார்வழிப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.


இந்நிலையில், அக்டோபர் 26 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வீட்டில் இருந்த பள்ளி மாணவி திடீரென மாயமானார்.

அவர் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அவரது உறவினர்கள் வீட்டில் விசாரித்து பார்த்தும், பள்ளி தோழிகளிடம் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், மாணவியின் தந்தை பாலசுப்பிரமணி தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பாண்டித்துரை என்ற இளைஞன் உடன் அந்த பள்ளி மாணவி காதல் கொண்டதும், அதன் காரணமாகவே வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

எனவே, இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாயமான பள்ளி மாணவியையும், மாணவியை அழைத்துக்கொண்டு சென்ற காதலன் பாண்டித்துரையையும் தேடி வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி