தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது திமுகவை விமர்சித்து கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், “திமுகவால் தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கார்த்தி சிதம்பரம் சுயநலத்துடன் பேசியிருக்கிறார். திமுக வேலை செய்யாவிட்டால் கார்த்திக் சிதம்பரம் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. திமுக பெருந்தன்மையோடு நடந்து கொண்டது” என தெரிவித்துள்ளார்.