கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வாவுபலி பொருட்காட்சி 18ஆம் தேதி துவங்கிய நிலையில், பாதுகாப்பு அளிக்க ரூ. 9. 80 லட்சம் செலுத்த வேண்டும் என எஸ். பி. அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டு திடீரென போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து போராட நேற்று அனைத்து கட்சியினரும் முடிவு செய்தனர். எனவே விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் எஸ். பி. யிடம் பேசியதையடுத்து மீண்டும் பொருட்காட்சியில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.