கன்னியாகுமரி மாவட்டம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ததோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நிறை குறைகளை கேட்டறிந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்