குமரி- பட்டதாரி வாலிபர் மாயம்

82பார்த்தது
குமரி- பட்டதாரி வாலிபர் மாயம்
கன்னியாகுமாரி மாவட்டம்
களியக்காவிளை அருகே சூரிய கோடு பகுதியை சார்ந்தவர் பொன்னுமணி மகன் பிளசர்சிங் எம். பி. ஏ. பட்டதாரி ஆவார். இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி யிருந்து வேலை தேடி வந்துள்ளார். வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளார். பல மணி நேரம் காணாததினால் இவரை பல இடங்களில் தேடியுள்ளனர். நண்பர்கள் உறவினைகள் வீடுகளில் தேடியும் காணவில்லை. இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி