நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பல மாதங்களாக சீரமைக்கப்பட்டாத நிலையில் குண்டும் குழியுமாக குளம்போல காட்சியளிக்கிறது.
இதனால் தினம் தோறு பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் ஆறு மாதங்களுக்கு முன்பே சாலையை சீரமைக்க 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டிருப்பதாக அறிவித்தும் , பணிகள் துவங்காததை கண்டித்து பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் குழித்துறை நகர பாஜக சார்பாக தேசிய நெடுஞ்சாலையில் மீன் வளர்க்க அனுமதி கேட்டு பேனர் வைக்க பட்டுள்ளது. சாலையில் குளம் போல காட்சியளிக்கும் பகுதிகளில் மீன் குஞ்சுகள் விட்டு மீன் வளர்க்க ஆசைபடுவோருக்கு அனுமதி கொடுக்க இந்த விண்ணப்பம்
தேசிய நெடுஞ்சாலைதுறை அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனர் அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக மாறி உள்ளதோடு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.