கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடைக்கோடு ஓடல் விளை பகுதியைச் சேர்ந்தவர் டோன் பெறின்(30, குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆனூஜ் மோன் என்பவருக்காக குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்துள்ளார், இந்நிலையில் அனூஜ் மோனின் மனைவி நீது மோள், அவரது தந்தை ராஜன், உறவினர் ராஜேஷ் ஆகியோர் சேர்ந்து வழக்கறிஞர் டோன் பெறினை தாக்கியுள்ளனர். இதை அடுத்து வழக்கறிஞர் டோன் பெரின் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் மனு ரசீது மட்டும் வழங்கிவிட்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை , இதனை அடுத்து வழக்கறிஞர் டோன் பெரின் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி குழித்துறை நீதிமன்றத்தில் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுத்திருந்தார், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றத்தில் முகாந்திரம் இருப்பதால் களியக்காவிளை காவல் நிலையத்திற்கு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் கோர்ட்டு உத்தரவின் பெயரில் களியக்காளை காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.