ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயத்தை சேர்ந்தவர் செல்வன் (50). இவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் பர்வின் ஸ்வீட் வின் (23). பிஎஸ்சி நர்சிங் படித்து முடித்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை சென்றிருந்தார்.
அங்கு நடந்த நேர்முகத் தேர்வில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் சோகத்துடன் ஊர் திரும்பிய அவர், மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று செல்வன் தனது மனைவியுடன் உறவினர் வீடு சென்றார். பின்னர் மாலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது படுக்கை அறையில் பர்வின் ஸ்வீட் வின் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு செண்பகராமன் புதூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி செய்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பர்வீன் ஸ்வீட் வின் ஏற்கவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.