திருவட்டாறை அடுத்த கல்லடிமாமூடு பகுதியில் நேற்று மாலையில் ரப்பர் மர துண்டுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி அம்பாசமுத்திரம் நோக்கி புறப்பட்டது. அப்போது அந்த பகுதியில் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. அந்த லாரி திருவட்டார் சந்திப்பு வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அந்த பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் முன்பு நின்றிருந்த மாமரத்தில் மோதி பாரத்துடன் சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் ஒர்க் ஷாப்பில் பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்கள் சேதம் அடைந்தன. மேலும் சாலையோரம் நின்ற 4 பைக்குகளும் சேதமடைந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ஜஸ்டிஸ் (55)என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார். அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவட்டார் போலீசார் சம்பவத்திற்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி மேலும் கிரேன் மூலம் லாரியை மீட்டனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இன்று 12-ம் தேதி காலை 10 மணியளவில் சமூகத்தலங்களில் வைரலாகி வருகிறது.