தக்கலை அருகே மணலி பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி பிரிட்டஸ். இவர் இன்று (29-ம் தேதி) காலை வழக்கம் போல் எழுந்து வீட்டின் கதவை திறந்தார். அப்போது அவருக்கு தெரியாமல் திடீரென இரண்டு மர நாய்கள் வீட்டில் உள்ள ரகசியமாக புகுந்துள்ளது. இதை சற்று தாமதமாகவே அறிந்து கொண்ட ஆண்டனி பிரிட்டஸ் அவற்றை விரட்ட முயன்றார்.
ஆனால் வீட்டில் உள்ளே ஓடிக்கொண்டு இரண்டு மரநாய்களும் டிமிக்கி கட்ட தொடங்கின. அதனை விரட்ட முயன்ற குடும்பத்தினரும் சோர்ந்து விட்டனர். இதற்கு பின் அவர்கள் தக்கலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் புகுந்த இரண்டு மரநாய்களை இடுக்கியை பயன்படுத்தி பிடித்து சென்றனர். பின்னர் அவற்றை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் காட்டு பகுதிகளில் கொண்டு சென்று விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.