கன்னியாகுமரி மாவட்டத்தில் ரம்புட்டான் பழ சீசன் துவங்கியது. பூ மற்றும் காய் பிடிக்கும் காலமான மே மாதம் முதல் தொடர் மழை பெய்ததால் மரங்களில் இருந்து பூ, காய்கள் அதிக அளவில் உதிர்ந்தது. இதனால் மரங்களில் ரம்புட்டான் காய்கள், பழங்கள் குறைவாகவே காணப்படுகிறது. ரம்புட்டான் பழங்களின் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக உள்ளது. குலசேகரம் பகுதியில் இந்த பழங்கள் கிலோ ரூ. 340 க்கு விற்கப்படுகிறது.