கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சாஸ்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஏசுபாய். இவரது வீட்டின் அருகில் நேற்று இரவு மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்த ஏசுபாய் அதிர்ச்சியடைந்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் உடனே நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து அங்கு பதுங்கியிருந்த 7 அடி நீள மலைப்பாம்பை பிடித்து உதயகிரிகோட்டையில் உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.