குமரி மாவட்டம் சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் வரை ஆண்டுதோறும் வைகுண்டசாமி பாதயாத்திரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பாதயாத்திரை சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் யாத்திரை தொடங்கியது. 2ஆம் நாளான நேற்று தக்கலை பரைகோடு பகுதியில் உள்ள அய்யா பதியில் யாத்திரை நிறைவு செய்தபோது, குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.