நாகர்கோவிலில் பா. ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

65பார்த்தது
இந்திய பிரதமராக மோடி 3-வது முறையாக நேற்று பதவி ஏற்றார். இதை நாடு முழுவதும் பா. ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதே போல குமரி மாவட்ட பா. ஜனதா சார்பில் நாகர்கோவிலில் 2 இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. அதாவது கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பா. ஜனதா தலைமை அலுவலகம் முன் மற்றும் அண்ணா பஸ் நிலையம் முன் ஆகிய 2 இடங்களில் பா. ஜன தாவினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துனை தலைவர் தேவ், மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன், வீரசூரபெருமாள், மாநகர பார்வையாளர் அஜித், கிழக்கு மண்டல தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் உள்ள கம்பத்தில் பா. ஜனதா கொடி ஏற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி