கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதி சேர்ந்த 15 வயது மாணவன் ஒருவன் வீட்டை விட்டு மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வடசேரி போலீசில் புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் நேற்று(செப்.30) இரவு முழுவதும் நாகர்கோவில் நகரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மணக்குடி பகுதியில் மாணவன் இன்று மீட்கப்பட்ட நிலையில் போலீசார் மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.