ஜனவரி மாதம் நடைபெற்ற சி.ஏ அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த தேர்வில் 21.52 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23 ஆயிரத்து 861 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த தேர்வில் இந்திய அளவில் ஐதராபாத் மாணவர் முதலிடத்தையும், விஜயவாடா மாணவர் இரண்டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.