கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் எஸ். பி அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதில், குடும்ப பிரச்சனை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, மோசடி வழக்குகள், அடிதடி வழக்குகள் போன்ற பிரச்சனைகளுக்கு புகார் கொடுத்த மக்களுக்கு போலீசார் தீர்வு ஏற்படுத்தி கொடுத்தனர்.