நாகர்கோவிலில் சாரல் மழை

77பார்த்தது
குமரி மாவட்டத்தில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அலுவலக பணி மற்றும் தினக்கூலி வேலைகளுக்கு செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். பகலில் அனல் பறக்கும் வெப்பக்காற்றும் வீசுவதால் முதியவர்கள், குழந்தைகள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பகலில் வெயிலின் வெப்பம் என்றால், இரவிலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பரிதவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் நாகர்கோவில்
மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த சாரல் மழையால்
சற்று குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி