நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வன் பேல்சன். இவரது மகன் ஜெரிவின் பேல்சன் (18), கல்லூரி மாணவர். இவர் நேற்று மதியம் வடசேரியில் உள்ள நண்பரை பார்ப்பதற்கு ஸ்கூட்டரில் சென்றார். டபுள்யுசிசி ரோட்டில் இருந்து புது குடியிருப்பு செல்லும் சாலையில் சென்ற போது சாலையின் நடுவே கிடந்த கான்கிரீட் கல் மீது ஸ்கூட்டர் ஏறி இறக்கியது.
இதில் ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டின் சுவற்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஜெரிவின் பேல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாநகர
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.