குமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் விவசாயிகள் மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் குமரி ஆட்சியர் ஸ்ரீதர் அவர்களிடம் அதிமுகவினர் நேற்று வழங்கினர். மேலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர்.