குமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.

81பார்த்தது
குமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்  (BAPASI) இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு. ஆனந்த் மோகன், இ. ஆ. ப. , உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி. யாங்சென் டோமா பூட்டியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கர நாராணயன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி