கண்டன்விளையில் மழை அரித்த சாலை ; சீரமைக்க கோரிக்கை

75பார்த்தது
கண்டன்விளையில் மழை அரித்த சாலை ; சீரமைக்க கோரிக்கை
குமரி மாவட்டம்   கண்டன்விளையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை இதுவரை சீரமைக்கப்பட வில்லை. இதனால் இந்த நெடுஞ்சாலை பாதி தார்ச் சாலையாகவும் மீதி சல்லிகள் பெயர்ந்தும் கிடக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்துவரும் மழை வெள்ளத்தில் கண்டன்விளை வளைவில் அரித்து செல்லப்பட்டு பக்கச்சுவர்கள் இடிந்து மிகவும் ஆபத்தான நிலையில் கிடக்கிறது.

      ஒரு வழிப்பாதையாக குறுகிப்போய் கிடக்கும் இந்த சாலையை போலீசார்  பேரிகாட் வைத்து எச்சரித்து உள்ளனர். இதனால் இருபுறமும் வரும் வாகனங்கள் நின்று வழிவிட்டு கடும் நெருக்கடியுடன் தினம் தினம் சென்று வருகின்றன. எனவே விபரீதங்கள் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி