சென்னை வளசரவாக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்ணை மிரட்டிய புகாரில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த இளம்பெண் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இன்ஸ்டா மூலம் பெண்களுக்கு அறிமுகமான சுஜித் என்பவர் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று கூறி அப்பெண்ணிடம் பணம் பறித்து வந்துள்ளார்.