நாகர்கோவில் நான்கு வழி சாலை பகுதியில் புரவசேரி என்ற கிராமம் அமைந்துள்ளது. சாலை ஓரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தை ஒட்டி உள்ள பகுதியில் தான் தற்போது கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக டாரஸ் லாரிகள் செல்வதற்கு நேர கட்டுப்பாடு விதித்திருப்பதால் குறிப்பிட்ட நேரம் தவறிவரும் டாரஸ் லாரிகள் இந்த கிராமத்தை ஒட்டி உள்ள சாலை பகுதியில் வரிசையாக நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலையில் நிறுத்தப்பட்டிருந்த டாரஸ் லாரியை அதன் டிரைவர் பின்னோக்கி எடுக்க முயன்றார். அப்போது திடீரென கட்டுப்பாட்டு இழந்த டாரஸ் லாரி வேகமாக பின்னோக்கி சென்று அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் என்பவரின் வீட்டின் மீது பயங்கரமாக மோதியது. இதில் வீட்டின் சமையலறை இடிந்து நொறுங்கி விழுந்தது.
இது குறித்து உடனடியாக அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.