தளியல் முத்தாரம்மன் கோவில்  கொடைவிழா இன்று துவங்கியது

559பார்த்தது
திருவட்டாரில் உள்ள பிரசித்தி பெற்ற தளியல் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா இன்று 20. ந்தேதி சனிக்கிழமை காலை 4. 30 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து  கணபதி ஹோமம், தேவிஸ்துதி பாராயணத்துடன் தொடங்கியது.  

     தொடர்ந்து  காலை 7. 30 மணிக்கு நாரயணீய பாராயணம், 10. 00 மணிக்கு  களபாபிஷேகம்,   மதியம் 12 மணிக்கு உச்ச பூஜை, அன்னதானம் நடந்தது.  

      மாலை 6. மணிக்கு  குங்கும அர்ச்சனை, புஷ்பாபிஷேகம்,   இரவு 6. 45 திருவிளக்கு பூஜை,   8 மணிக்கு பரத நாட்டியம் ஆகியன நடக்கிறது.

2. ம் நாள்(21. ந்தேதி ஞாயிறு)  காலை 6 மணிக்கு  தேவிஸ்துதி,   10 மணிக்கு குங்குமாபிஷேகம், பஸ்மாபிஷேகம்,   மாலை 4 மணிக்கு  பஜனை, மாலை 6 மணிக்கு குங்கும அர்ச்சனை, புஷ்பாபிஷேகம், மாலை 6. 30 மணிக்கு சங்கீத அர்ச்சனை, இரவு 8. 30 மணிக்கு பரத நாட்டியம், 3. ம் நாள் (22. ந்தேதி திங்கள்கிழமை) காலை  5 மணிக்கு அபிஷேகம்,   காலை 6 மணிக்கு தேவிஸ்துதி பாராயணம், காலை 10 மணிக்கு அஷ்டாபிஷேகம், வருஷாபிஷேகம், மாலை 6. மணிக்கு குங்கும அர்ச்சனை, புஷ்பாபிஷேகம், இரவு 8. 30 குடியிருப்பு தீபாராதனை, இரவு 12மணிக்கு வலியபடுக்கை, தீபாராதனை ஆகியன நடக்கிறது. தொடர்ந்து 24-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
5. ம் நாள் (24. ம் தேதி) காலை 7. 30 மணிக்கு  உஷபூஜை, தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்சக்கொடை, தீபாராதனை, 1. 30 மணிக்கு வாழ்த்துப்பாடி தீபாராதனை ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்தி