வங்கி இடமாற்றம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
குமரன்குடி சந்தைப் பகுதியில் கிராம பகுதிக்கென மத்திய அரசால் துவங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக குமரன் குடி எஸ். பி. ஐ. வங்கி கிளை செயல்பட்டு வந்தது.
இதன் மூலம் கல்லறவிளை, மங்காட்டு கடை, மாத்தார், மாத்தூர், குமரன் குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இந்த வங்கி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்தகிளையை அந்தப் பகுதியில் இருந்து மூடிவிட்டு நகரப் பகுதிக்கு இடமாற்றம் செய்யும் முயற்சிகளை வங்கி நிர்வாகம் எடுத்து வருகிறது.
வங்கியை இடமாற்றம் செய்யக் கூடாது என நேற்று மாலை பொது மக்கள் சார்பில், வங்கியின் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் தலைமை தாங்கினார்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், பொருளாளர் ஐ. ஜி. பி. லாரன்ஸ், வேர்க் கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார், குமரன் குடி ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஆஸ்டின் ஜிஜோ, கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜோண் , ஆற்றூர் நகர காங்கிரஸ் தலைவர் ஜாண் வெர்ஜின், திருவட்டார் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜேஷ், மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பவானி எட்வின் ஜோஸ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் செலின் மேரி, ஆற்றூர் குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வங்கியை இடமாற்றம் செய்யக் கூடாது என கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி